காற்றின் தரம் பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பெரும்பாலான பகுதிகளில் மிதமான  நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காற்றின் தரம் காணப்பட்டது.

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 38 மற்றும் 80 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமான நிலையிலும் காணப்படும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் மிதமான நிலையில் காணப்படும்.

அதிகமாக போக்குவரத்து நெரிசல்  காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல்  2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects