மட்டக்களப்பு இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வானது மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு பழைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் திருமதி பிரஷ்னவி தலைமையிலான குழுவினர் இரத்ததான நிகழ்வில் குருதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கல்லூரியின் அதிபர் கே.பாஸ்கர், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் யூ.மயுரன் உள்ளிட்ட மாணவர் சங்கத்தின் பல பிரதிநிதிகளும் அங்கு பிரசன்னமாகி இருந்ததோடு, இந்த இரத்ததான நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தாதியர்கற்கை மாணவர்கள், கல்லடி சிவானந்தா மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்கள், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
2 Responses
Weldone boys
அனைவருக்கும் வாழ்த்துகள்.