களுவாஞ்சிக்குடியில் பிரதேச இலக்கிய விழா – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமாகிய உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதேச மட்டத்திலான கலை இலக்கியத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக கவிதை, சிறுகதை, பாடல் நயத்தல், கதை சொல்லுதல் போன்ற வாய்மொழி மூலமான போட்டிகள் பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, கனிஷ்ட பிரிவு, சிரேஸஷ்ட பிரிவு, அதி சிரேஷ்ட பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில்
சிறுகதை, மரபு மற்றும் புதுக்கவிதை சிறுவர் கதை ஆக்கம் மற்றும் திரைப்பட விமர்சனம் என பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து மாவட்ட மட்டம் மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களது கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன் போது 2024ம் ஆண்டு இலக்கிய போட்டியில் தேசிய ரீதியில் நாட்டார் பாடலில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் வி.டிஹாணனுக்கு பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலாச்சார அதிகார சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects