மட்டக்களப்பு “தீரணியம்” பாடசாலையின் 2023ம் ஆண்டிற்கான நிறைவு விழா தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல் தலைமையில் தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்கமைப்பில் 19.12.2023 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே ஜே முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பு அதிகாரி, சென் ஜோன்ஸ் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் மீரா சாய்பு ,தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல மருத்துவ சேவை ஆலோசகரும் .வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார் , தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அருட்சகோதரர் ஸ்டீபன் மெதியு , தீரனியம் திறந்த பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
2023 ஆம் ஆண்டிற்கான நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் அதிதிகளினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது..
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇