இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி பி.ப 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது .
இது தொடர்பான முன்னோட்ட கூட்டம் ஆளுநர் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன், இக் கள விஜயத்தின் போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம், அமைச்சுக்களின் செயலாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇