சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் வாழும் சூழலை சிறந்த சூழலாக உருவாக்குவதற்காகவும் மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி வாரத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொத்மலை பிரதேச சபை அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த காலப்பகுதியில் கொத்மலை பிரதேச சபை நிர்வாக பகுதியை உள்ளடக்கியதாக 45 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கொத்மலை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஜி.ஏ.கே.முரமுதலி அறிவித்துள்ளார்.
இதன்போது, நடமாடும் சேவை தினம், சுற்றுச்சூழல் மற்றும் மரம் நடும் தினம், சுகாதாரம் மற்றும் சுத்திகரிப்பு தினம், வருமான ஊக்குவிப்பு தினம், இலக்கியம், கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி தினம், பொதுப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு தினம் என்பவற்றுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் திட்டம் நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










