நீண்ட வார விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலும் விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரம் கொழும்பு, கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட புகையிரத சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, இன்று (09.05.205) மற்றும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளிலும் இச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










