அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று (28.04.2025) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்ய அல்லது பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கிடையில், சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் (User Name) கடவுச்சொல் (Password)என்பவற்றை பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.
மீள் பரீசிலணை செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியான பின்னர் பாடசாலைகளுக்கு அச்சிடப்பட்ட பிரதிகள் அதிபர்களுக்கு வழங்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டது.
இந்நிலையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்கமுடியுமென பரீட்சைத் திணைக்களம்மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










