சர்வதேச சந்தையில் இலங்கை இளநீருக்கான தேவை துரிதமாக அதிகரித்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கை தெங்கு அபிவிருத்தி சபை, தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நேற்று அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இலங்கையின் தென்னைச் செய்கையின் அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
“இதுவரை பெருந்தோட்டப் பயிராகப் பயிரிடப்படாவிட்டாலும், இந்நாட்டில் விளையும் இளநீருக்கு சர்வதேசச் சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. 2022ஆம் ஆண்டு 11 மில்லியன் இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 110 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது. இந்த வருடத்தில் இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள இளநீர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாகும்.அதன் மூலம் கிடைத்த வருமானம் 140 மில்லியன் ரூபா என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇