உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மார்பகப் புற்றுநோய் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
வருடம் ஒன்றில் புற்றுநோயுடன் 5,500 பெண்கள் அடையாளங் காணப்படுகின்றனர்.
நாள் ஒன்றில் புதிய நோயாளர்கள் 15 பேர் அடையாளங் காணப்படுகின்றனர்.
அத்துடன் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ளாவதாகத் தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் தொடர்பாக தெளிவுபடுத்தும் மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அடையாளங் காண்போம், சிகிச்சை அளிப்போம், வெற்றி கொள்வோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த தெளிவுபடுத்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇