35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்று (29.04.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முதல் பலாலி உயர்பாதுகாப்பு வலயம் காணப்படுவதனால், யாழ்ப்பாணம் – பலாலி வீதி வசாவிளான் சந்தியுடன் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி முதல் நிபந்தனைகளுடன் குறித்த வீதி முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.
பேருந்து சேவைக்கான நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படுமென பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










