இம் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு கடவுச்சீட்டு சேவைகள் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதான் அடிப்படையில், ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை இம் மாதம் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










