அன்னையர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் அமைந்துள்ள Shane பாலர் பாடசாலையில் இன்று (09.05.2025) அன்னையர் தினம் சிறப்பிக்கப்பட்டது.
முன்பள்ளியின் அதிபர் டிலினி குஷாந்த் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அணுரேகா விவேகானந்தன் முன்பள்ளி அதிபரினால் கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களின் அன்னையர் தின கலை நிகழ்ச்சிகளும், அன்னையர்களுக்கான வினோத உடை நடைபவனியும், விளையாட்டுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்கள் தங்களது அன்னையர்களை கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










