புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வாகன இலக்கத்தகடு விநியோகம் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் படி, புதிய வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், பற்றாக்குறை காரணமாக வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தாமதமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதென திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான தற்காலிக தீர்வாக வாகன எண்ணை உள்ளடக்கிய மற்றும் பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.
வாகன இலக்கத்தகடு விநியோக தற்காலிகமாக இடைநிறுத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










