கொழும்பு – யாழ்ப்பாண விமான சேவை இன்று (02.06.2025) பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது.
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது.
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி,
இச் சேவையினை வாராந்தம் 3 நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இருவழி கட்டணமாக ரூ. 68,000 அறவிடப்படும்.
07 கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும்.
இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும்.
பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடம் தேவைப்படும்.
வெகுவிரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்கா வரை சேவையை விசாலப்படுத்தி நாம் விண்ணப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்” என தெரிவித்தார்.
மேலும், குறித்த விமானமானது இன்று (02.06.2025) பி.ப 1.05 மணியளவில் யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










