பொசன் நிகழ்வை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு செல்வோர்க்கான கையடக்க தொலைபேசி செயலி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொசன் நிகழ்வை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் ஊடாக வழங்குவதற்கு, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் ஊடாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த கையடக்க தொலைபேசி செயலியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த செயலியின் பயன்பாட்டின் ஊடாக வாகன தரிப்பிடங்கள் மற்றும் அந்த தரிப்பிடத்தில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, தானசாலை (தன்சல்) உள்ள இடங்கள், முதலுதவி, மலசலகூடங்கள் மற்றும் பாதுகாப்பாக நீராடக்கூடிய இடங்கள் தொடர்பிலான தகவல்களைப் பெற முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects