மட்டக்களப்பில் ஊடக அமைச்சினால் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையிடல் பயிற்சி செயலமர்வானது வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ் வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) செவ்வந்தி மற்றும் வெகுஐன ஊடக அமைச்சின் ஊடக பணிப்பாளர் கே.பி.ஐயந்த தலைமையில் மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் 12.06.2025 அன்று இடம் பெற்றது.

வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவன (FAO) செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு நடைபெற்றது.

இச் செயலமர்வின் வளவாளார்களாக உணவு மருந்து பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன், கலாநிதி ஶ்ரீ பிரிந்தன் ஆகியோர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்கள், சமூக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அதிகாரி யூடி தீபன் பெரேரா மற்றும் டினா ஜயரத்னம், மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects