மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், மாவட்ட செயலகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந் நிகழ்வு, மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில், 16.06.2025 அன்று புதிய மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் எம்.ஆர். நிஷாவின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் பாடசாலை இடை விலகலை குறைக்கும் நோக்கில், பல்வேறு திட்டங்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்து வருகிறது.
நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், பெறப்பட்ட கற்றல் உபகரணங்களை மாணவர்கள் பயனுள்ளதாக பயன்படுத்தி, பொழுதுபோக்கில் இல்லாமல் கல்வியில் அக்கறையுடன் ஈடுபட்டு சிறந்த புள்ளிகள் பெற வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஏ. பிரபாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே.சியாம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்விற்கான அனுசரணையை புகழிடம், சைனிங் ஸ்டார் மற்றும் ஏ யு லங்கா நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










