சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைக்க முடிவு – ஏர் இந்தியா விமான சேவை

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தனது சர்வதேச விமான சேவைகளை அடுத்த சில வாரங்களுக்கு உடன் அமுலாகும் வகையில் 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளதாக, ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது.

ஏன் எனில், தமது செயல்பாடுகளின் ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான சேவை குறிப்பிட்டுள்ளது.

இச் சேவைக் குறைப்புகளால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம், மன்னிப்பைக் கோருவதாகவும் ஏர் இந்தியா விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பயணிகள் தங்கள் பயணத்தை எந்த செலவும் இல்லாமல் மறு அட்டவணைப்படுத்தவோ அல்லது அவர்களின் விருப்பப்படி முழு பணத்தைத் திரும்பப் பெறவோ ஒரு தேர்வு வழங்கப்படும் என்றும், ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் எதிர்கொண்ட அனர்த்தம் மற்றும் அதன் பின்னர் வந்த விமானத் தாமதங்களுக்கு மத்தியிலேயே, இந்த அறிவித்தலை, ஏர் இந்தியா விமான சேவை விடுத்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects