வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதர் டிரின் தி டாம் (Trinh Thi Tam) , பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை 18.06.2025 அன்று பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது, பாதுகாப்பு செயலாளரும் வியட்நாம் தூதரும் இரு நாடுகளுக்கிடையிலுமான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக நிலவும் இராஜதந்திர உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பையும் வலியுறுத்தியது.
அத்தோடு , இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதலை தொடர்ந்து வளர்க்கும் ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகளில் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதற்கும், கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவது குறித்தும் இச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
மேலும், தூதரின் வருகைக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இரு நாடுகளின் நலனுக்காக வியட்நாமுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள இலங்கை எப்போதும் தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










