நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு கிலோகிராம் தலபதின் மொத்த விலை 2,200 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கொப்பரா தலபத்தின் மொத்த விலை 2,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சூரை மீன் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக பேலியகொட மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக விலங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()