தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.
தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, நீர்த்தேக்கங்களின் அருகில் மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்பாசன திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பீ.சி சுகீஸ்வர இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇