இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்ட மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு கல்வி சார் விஜயம் மேற்கொண்டனர். அவர்கள் ஜூன் 27 வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

அவர்களின் இந்த கல்வி சார் விஜயத்தின் சிறப்புக் கவனம் செலுத்தும் பகுதிகளில், ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பு, களஞ்சிய முகாமைத்துவம், இன்வென்டரி நிர்வாகம் மற்றும் கையிருப்புப் பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.

இந்த விஜயத்தின் போது அவர்கள், தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம், இலங்கை சுங்கம், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகம், இலங்கைப் பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

மாலைதீவு ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் 08 பேர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேயுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழுவும் பங்கேற்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects