ஜனாதிபதியின் செயலாளருக்கும், இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு 24.06.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

தற்போது வங்கித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு வழங்கக் கூடிய தீர்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, கொள்கை ரீதியான பொறிமுறையின் அவசியத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்), சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டீ. கமகே ஆகியோருடன் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects