இணைவழி ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் அமைப்பு தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இச் சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை செயலிழந்திருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இச் செயலிழப்பை சரிசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










