இன்று (16.07.2025) காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
பல தரகு நிறுவனங்களின் ஒழுங்கு மேலாண்மை அமைப்பு (Order Management System – OMS) செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் தினசரி வர்த்தக நடவடிக்கை காலை 10:40 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கும் என பங்குச் சந்தை தெரிவித்தது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










