இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் இலங்கைக்கு 635,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 209,181 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வீதம் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇