ஐசிசி மகளிர் உலகக் கிண்ண போட்டியின் மற்றொரு முக்கியமான போட்டி 06.10.2025 அன்று நடைபெற்றது.
அதன்படி, புள்ளிப்பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்திய மகளிர் அணி எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அவுஸ்திரேலியா மகளிர் அணி குறித்த பட்டியலில் 3 புள்ளிகளோடு 2 ஆவது இடத்திலுள்ளது.
இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் 3ஆம், 4ஆம் மற்றும் 5 ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.
இந் நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதால் இலங்கை மகளிர் அணிக்கு 1 புள்ளி வழங்கப்பட்டது.
இதன்படி புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










