புனித ஜோசப் வாஸ் இறையியல் கல்லூரியில் கலைமாமணி மற்றும் டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்த பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வரும் , ஜோசப் வாஸ் இறையியல் கல்லூரியின் இயக்குனருமான அருட்தந்தை. ஜோர்ஜ் ஜீவராஜ் தலைமையில் மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் (17.02.2024) அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டதுடன் ,சிறப்பு விருந்தினர்களாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர். கலாநிதி பாரதி கெனடி , கிழக்குப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீக துறைத் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி நவரட்னம் அடிகளாரும் , கௌரவ அதிதிகளாக இறையியல் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளர்களான மௌலவி ரமீஸ் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. சி.லோகராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர் .
இதன் போது புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
மேலும் 2023ம் ஆண்டு கல்லூரியில் டிப்ளோமா பரீட்சையில் சித்தியடைந்த 16 மாணவர்களுக்கான சான்றிதழ்களும், நான்கு வருட பட்டப்படிப்பை நிறைவு செய்த 36 மாணவர்களுக்கு உரோம் ஊர்பானிய பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கலைமாணி பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇