நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வேதன முரண்பாடுகளை தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இத் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளைய தினம் (12.06.2024) கண்டனப் போராட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பினர் இணைந்து வேதன முரண்பாட்டைத் தீர்த்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி நாளைய தினம் (12.06.2024) நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாகப் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
10.06.2024 அன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடகச் சந்திப்பில் ஆசிரியர் விடுதலை முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇