Innovation Island Summit Sri Lanka இன்று ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் சர்வதேச மாநாடான Innovation Island Summit Sri Lanka 2025 கொழும்பில் இன்று (20.02.2025) ஆரம்பமாகியது.

மாநாட்டின் பிரதம உரையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிகழ்த்தவுள்ளார் .

இந் மாநாடு இலங்கையை உலகளாவிய புத்தாக்க மையமாக மாற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

50 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பல்வேறு துறைகளின் உயர்மட்ட நிபுணர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதன்மூலம் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் திறன்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் பிரபல்யமடைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகின்றது.

இந்திய சுற்றுலா மேம்பாட்டின் தந்தையாகத் திகழும் Incredible India எண்ணக்கருவின் ஸ்தாபகர் அமிதாப் காந்த் (Amitabh Kant) இன்றைய மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

Innovation Island Summit Sri Lanka மாநாடு இன்றும் , நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects