நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டது. அதேவேளை, கண்டி, காலி, புத்தளம், பதுளை மற்றும் மொனராகலையில் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 32 தொடக்கம் 60க்கு இடையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான நகரங்களில் ஆரோக்கியமான நிலையிலும், கண்டி, காலி, பதுளை, பொலன்னருவா மற்றும் மொனராகலையில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என்பதை குறிக்கின்றது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










