பொதுமக்களுக்கு தூய உணவு எது? தூய குடிநீர் எது? என்ற தௌிவான விளக்கம் தேவை -உணவு, சுகாதார, கட்டுப்பாட்டு அதிகாரி !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையைப் பொறுத்தவரை தூய உணவு என்பது பாரிய சவாலாக உள்ளது. இன்னும் சில காலத்தில் உணவுகள் இல்லை என்று கூறுமளவுக்கு கலப்படமும் மாற்றமும் எற்படலாம் என சுகாதார அமைச்சின் உணவு சுகாதார கட்டுப்பாட்டு அதிகாரி சுப்ரமணியம் சுதர்ஷன் தெரிவித்தார்.

கட்டுகாஸ் தோட்டை மகாவலி ரீச் ஹோட்டலில் ஊடக அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு தொடர்பாக ஊடக வியலாளர்களைத் தௌிவுபடுத்தும்  செயலமர்வில் விசேட பேச்சாளராகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது முக்கிய மான ஒன்று, அதனை தூய்மையானதாகப்  பெற்றுக் கொண்டால் மட்டுமே அவ் உயிரினம் நீடிக்க முடியும். 

மனிதனைப் பொருத்தவரை தூய உணவு, தூய குடிநீர் என்பன இன்றியமையாதது.  இயற்கையுடன் ஒன்றி வாழும் மனிதனுக்கு இயற்கைக்கு  இசைவான உணவு உட்கொள்ளாத பட்சத்தில் அது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

இன்று தூய உணவு, தூய குடிநீர் என்ற இரு விடயங்கள்  தொடர்பாக மிகத் தௌிவான விளக்கம் தேவைப்படுகிறது. போதிய விளக்கமின்மை காரணமாக அனேகர் போலிகளைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர். இது எதிர் காலத்தில் பலத்த சவாலை மனித இனம் எதிர்கொள்வதாக அமைந்து விடும்.

எனவே ஊடகவியலானர்கள் தூய உணவு தொடர்பாக பொது மக்களை தெனிவு படுத்த வேண்டும். அந்த அடிப்படையிலே சுகாதார அமைச்சு ஊடக வியலாளர்களுக்கு இவ்வாறான செயலமர்வுகளை நடத்தி வருகிறது. நாடலாவிய ரீதியில் நடத்தப்படும் தொடர்  செயலமர்விர் இது நான்காவது செயலமர்வாகும்.

இன்று உணவு வகைகளில்  இரசாயனங்களும், பீடைகளும், பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. சுவையூட்டிகள், நிறமூட்டிகள் மற்றும் அவற்றை பொதியிடல், களஞ்சியப்படுத்தல், சந்தைப்படுத்தல்  போன்ற பல செயற்பாடுகளில் உணவு மாசடைதல் ஏற்படுகிறது.

உணவு தயாரிப்பவர்களையோ, வர்த்தகர்களையோ, சந்தைப்படுத்துவோரையோ குறை கூறுவதை விட பொதுமக்களாகிய நாம் அவ்வாறான உணவுகளை அல்லது அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களை புறக்கனிப்பதன் ஊடாக உணவை  மாசடையச் செய்யும்  செயற்பாட்டை தவிர்க்க முடியும்.

உதாரணமாக ஒரு வர்த்தக நிறுவனத்தில் பொருட்களை திறந்து வைத்திருந்தால் ‘எமக்கு திறந்துவைக்கப்பட்ட உணவு வேண்டாம்’ என நுகர்வோர் அதனை புறக்கனித்தால் அந்நிலைமை ஏற்படாது. அதே போல் உணவுப் பண்டங்களை கையால் தொட்டு விற்கும் இடங்களையும் நாம் புறக்கனிக்க முடியும். இவ்வாறு செய்ய வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கலாம். சட்டத்தால் மட்டும் இதனை தடுக்க முடியாது என்றார். 

கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சேனக தரவல தெரிவித்ததாவது,

சில வருடங்களுக்கு முன் தன்னால் கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரித்தில் சில இடங்களில் தண்ணீர் மாதரிகள் எடுக்கப்பட்டன.  அவற்றில் 100 சதவீதம் அசுத்தம் காணப்பட்டது.  

காரணம் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் மலசல கூடப் பாவணை மிக மிக அரிது. தேயிலைத்  தோட்ட மறைவிடங்களையே அவர்கள் அதிகம் பாவிக்கின்றனர். 

இதன் காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் மாசடைகின்றன. அதிலிருந்து பெறப்படும் குடிநீரும் மாசடைந்து காணப்படுகிறது. இவ்வாறு மனிதன் தனது கரங்களால் அசுத்தப்படுத்திய நீரையே தானும் அருந்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார். 

களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி விஜயகாந்த ரூபசிங்க உட்பட மற்றும் பலர் இங்கு கருத்து வௌியிட்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects