ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வாக்காளர்களுக்கு இலவசமாக அஞ்சல் மூலம் விநியோகிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி வேட்பாளர் ஒருவர் இத்தகைய தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது கொள்கை அறிக்கையை வாக்காளர்களுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்கு ஒரேயொரு விஞ்ஞாபனத்தினை மாத்திரமே விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇