யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 12/07/2024 அன்று நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் , பிரதமரிடம் கூறினார். அத்துடன் ஏனைய பல திணைக்களங்களில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், ஏனைய திணைக்களங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇