இலங்கை எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு சிக்கல்களை தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால் இரண்டாம் காலாண்டு பகுதியில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாக தீர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை தீர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந் நிலையில், லண்டனில் தற்போது இடம்பெற்று வரும் முறியாளர்களுடனான கலந்துரையாடல்களில் சாதகமான பெறுபேறுகளை எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென் சீனாவில் இடம்பெற்ற போவா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇