மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினரால் அனுமதிப்பத்திரத்தில் விடுதலை வழங்கப்பட்ட கைதியொருவரின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் நீரிறைக்கும் இயந்திரம், குழாய்கள் உட்பட உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
மட்டக்களப்பின் பாவற்கொடிச்சேனை, நொச்சியாண்டகல் கிராமத்தைச்சேர்ந்த முத்துலிங்கம் பாலசுந்தரம் என்பவருக்கு வீட்டுத்தோட்டம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை போன்றவற்றிற்கு உதவும் வகையில் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
21-06-2025 அன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்ற சங்கத்தின் மாதாந்தக் கூட்டத்தில் வைத்து சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் முன்னிலையில் சங்கத்தின் தலைவர் சடாட்சரராஜா மற்றும் ஏனைய அங்கத்தவர்களினால் இவ் உபகரணங்கள் பயனாளியிடம் கைளிக்கப்பட்டமையும் சுமார் 75,000/- பெறுமதியான இவ் உபகரணங்கள் சங்கத்தின் அங்கத்தவர்களான எபனேசர் தர்ஷன் மற்றும் தினேஸ் ஆகியோரின் பங்களிப்பில் சங்கத்தினூடாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










