2025ஆம் ஆண்டுக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 270,000 ஆக மட்டுப்படுத்துவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் வருகையால், அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுநோயின் போது மாணவர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டதாகவும் கொவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை வரம்புகளை எதிர்காலத்தில் தெரிவிக்கும் என்றும் அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇