ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க விலங்குகள் மீதான சோதனைகளை மாற்றக்கூடிய மேம்பட்ட மாற்று வழிமுறைகள் உள்ளன. அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர முன்வர வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
பல்வேறு அற்புதங்களுடன் கூடிய இந்த உலகம் மனித குலத்துக்கு மட்டும் சொந்தமில்லை. ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனிதர்களின் ஆதிக்கம் இவ்வுலகப் பரப்பில் நாளுக்குநாள் விரிவடைந்து வருகிறது. தாவரங்கள், வனங்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. மேலும் மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு வகையான ஆராய்ச்சிகளுக்கும் விலங்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக உலகளவில் பெரும்பாலான மருத்துவ ஆய்வுக் கூடங்களில், விலங்குகள் ஆய்வுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அப்போது மனிதர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தக்கூடிய இயந்திரக் கருவிகளால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இந்த சித்திரவதையைத் தடுக்க தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் 1979ம் ஆண்டில், ஏப்ரல் 24ம் திகதியை உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.
உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day For Animals In Laboratories/World Lab Animal Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
1979ம் ஆண்டில் அமெரிக்க தேசிய உடற்கூராய்வு எதிர்ப்பு சங்கம் ஆய்வக விலங்குகளுக்கான உலக தினத்தை ஏப்ரல் 24ம் திகதியன்று லார்ட் ஹக் டவுடிங்கின் பிறந்தநாளின்போது தோற்றுவித்தது. இந்த உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள எதிர்ப்பு தேசிய உடற்கூராய்வு எதிர்ப்பு சங்கத்தினர்களால் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஆய்வக விலங்குகளுக்கான உலக தினத்தில் ஆராய்ச்சிக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், ஊடக நிகழ்வுகள் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன. புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 100 மில்லியன் விலங்குகள் ஆய்வகங்களில் பாதிக்கப்பட்டு இறக்கின்றன. விலங்குகள் மீது மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன.
ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க விலங்குகள் மீதான சோதனைகளை மாற்றக்கூடிய மேம்பட்ட மாற்று வழிமுறைகள் உள்ளன. அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர முன்வர வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇