மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் பெய்த அடைமழையினால் தேங்கியுள்ள வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் பணிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷின் பணிப்புரைக்கு அமைவாக ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்களை சுத்தம் செய்து வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகள் ( 03.01.2024 ) அன்று மேற்கொள்ளப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஷ், ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளர் வி. பற்குணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் மீராகேணி, மிச்நகர் மற்றும் ஐயங்கேணி ஆகிய பகுதிகளில் கனரக வாகனங்களின் மூலம் வடிகான்கள் சீரமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .