நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையை அண்டிய கொழும்பு உள்ளிட்ட பல பிரதேச மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 48 மணிநேரத்திற்குள் எஹெலியகொட, நோர்வுட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, பாதுக்கை, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, களனி கங்கையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










