மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் இடம் பெற்றது.

முதற் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட இருதயபுரம் கிழக்கில் ஆறு பயனாளிகளும் திமிலதீவில் 2 பயனாளிகளுக்குமான வீடுகளுக்குரிய அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டுக்கான அடி கல்லினை நாட்டி வைத்தார்.

சிறப்பு அதிதியாக தேசிய வீடு அமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கரன் கலந்து கொண்டார். தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு வீட்டிற்கு பத்து லட்சம் ரூபாய் அரசாங்கத்தினால் மானிய தொகையாக வழங்கப்பட உள்ளது.

இன்றைய நிகழ்வுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects