நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி செய்கை நீரில் மூழ்கியுள்ளமையே இதற்கான காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பச்சை மிளகாய் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தக்காளி கிலோவொன்று 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, கறி மிளகாய் கிலோவொன்று 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோவொன்று 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇