அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் யணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது. 

அதன் அடிப்படையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். 

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 6.6% அதிகமாகும். 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது 18.5% ஆகும். 

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேரும், நெதர்லாந்திலிருந்து 15,556 பேரும், சீனாவிலிருந்து 12,982 பேரும், பிரான்சிலிருந்து 11,059 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர். 

அதன்படி, 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 ஆகும். 

இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects