2023 டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2024 மே மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சாதாரண தரப் பரீட்சை மே மாதம் வரை ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டு முதல், தேர்வுகள் வழமை போல் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇