நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் வெள்ள நிலைமையுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇