கிழக்கு மாகாண லயன்ஸ் கழகங்களின் அனுசரனையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் (19.02.2024) அன்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தியின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண லயன்ஸ் கழக ஆளுனர், உதவி ஆளுனர், லயன்ஸ் கழக தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது 6000 ரூபா பெறுமதியான அனர்த்த நிவாரண உலர் உணவுப் பொதிகள் 150 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇