கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இறக்குமதிச் செலவு மற்றும் ஏற்றுமதி வருமானம் என்பன அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்த ஏற்றுமதி வருமானம் 2 ஆயிரத்து 30 அமெரிக்க டொலர்களாகவும், இறக்குமதிச் செலவினம் 2 ஆயிரத்து 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇