பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவவால் செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் ஆலோசனைப்படி குறித்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பகிடிவதை முற்றாக ஒழிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளதால், பகிடிவதை மட்டுமல்லாமல், மாணவ மாணவிகளால், நிர்வாகம் அல்லது வேறு தரப்பினரால் ஏற்படும் அனைத்து வகையான துன்புறுத்தல்களுடன், அத் தரப்பினரால் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை நிறுத்துவதும் இந்த செலணியின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










