6 பில்லியன் செலவில் தெனியாயவுக்கு புதிய நவீன மருத்துவமனை !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பழமையான மருத்துவமனைக்குப் பதிலாக, தெனியாயவில் நவீன வசதிகளுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்படும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஆகியோர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்த திட்டத்துடன் தொடர்புடைய நிதி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தற்போதுள்ள மருத்துவமனை மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ. 6 பில்லியன் செலவில் ஹேண்ட்ஃபோர்ட் பெருந்தோட்டத்தில் 29 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

இதற்கான நிர்மாணப்பணிகள் 2026 ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும் என தெரிவி்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தின் கீழ் 205 படுக்கைகளை கொண்ட கட்டடங்கள் அமைப்படவுள்ளதுடன், இதில் ஆண், பெண், குழந்தைகள் மற்றும் மகப்பேறு அறைகள், அறுவை சிகிச்சை அறைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் இரத்த வங்கி ஆகியவையும் இதில் உள்ளடங்கவுள்ளன.

இந்தத் திட்டத்தில் மருத்துவ ஊழியர்களுக்கான தங்குமிடம் மற்றும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு தனி நுழைவாயில் என்பனவும் அமைக்கப்படவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects